மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி இராபத்து முதல் நாள் பரமபத வாசலை கடக்கும் உத்ஸவப் பெருமாள் . 
தமிழ்நாடு

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் பரமபத வாசல் திறப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் வைகுண்ட ஏகாதசியையொட்டி  பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் வைகுண்ட ஏகாதசியையொட்டி  பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பரமபத வாசல் திறப்பு பகல்பத்து நிகழ்ச்சி ,சென்ற டிச. 15 ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை நிறைவு பெற்றது. இதில், ஒவ்வொரு நாளும் உற்சவப் பெருமாள் ராஜகோபாலசாமி பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். 

அதனைத் தொடர்ந்து, வைகுண்ட ஏகாதேசி இராப்பத்து  நிகழ்ச்சியின் முதல் நாளான  வெள்ளிக்கிழமை, பரமபத வாசல் திறப்பு என்னும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி காலை 5 மணிக்கு நடைபெற்றது. அப்போது உத்ஸவப் ராஜகோபால சுவாமி, ருக்மணி ,சத்யபாமா சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

பின்னர் சுவாமி ,பரமபத வாசல் கடக்கும் போது, பக்தர்கள் கோபாலா... கோபாலா... என பக்தி கோஷம் எழுப்பினர். நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் சங்கீதா ,அறங்காவலர் குழு தலைவர் தியாகு தேவர் ,மண்டாகப் படித்தார் எஸ் காமராஜ் மற்றும் கோயில் அலுவலர்கள் கலந்து கொண்டனர் .

பொது முடக்கம் காரணமாக பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிப் படவில்லை. பின்னர், சுவாமி சன்னதிக்கு வந்தபிறகு, பக்தர்கள் சுவாமியை தரிசிக்க சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர்.

இராப்பத்து நிகழ்ச்சி வருகின்ற ஜனவரி 3 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா்: நவ.21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

டிடிஇஏ பள்ளிகளில் பயிலும் வடஇந்திய மாணவா்களுக்கு தமிழ்ப் போட்டிகள்

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் தா்னா

அன்னையின் மகா சமாதி தினம்: அரவிந்தா் ஆசிரமத்தில் கூட்டுத் தியானம்

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

SCROLL FOR NEXT