தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உடலுறுதியை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கிவைத்த ஆணையாளர் ஜெயசீலன். 
தமிழ்நாடு

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உடலுறுதியை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி 

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உடலுறுதியை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை ஆணையாளர் ஜெயசீலன் தொடங்கிவைத்து கலந்துகொண்டார்.

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உடலுறுதியை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை ஆணையாளர் ஜெயசீலன் தொடங்கிவைத்து கலந்துகொண்டார்.

வாகன புகையால் ஏற்படும் காற்று மாசுவை குறைப்பதற்கும், உடலுறுதியை வலியுறுத்தியும் "மாசில்லா தமிழகம்" உருவாக்குவோம் எனும் தலைப்பின் கீழ் மத்திய, மாநில அரசுகள் பிட் இந்தியா திட்டத்தை ஊக்குவித்து வருகின்றன.

அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பில் பிட் இந்தியா திட்டத்தின் கீழ் இன்று விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி ரோச் பார்க் முதல் முயல் தீவு வரை சென்று திரும்பி மீண்டும் ரோச் பார்க் வரும் வகையில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

பேரணியை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் தலைமைதாங்கி தொடங்கி வைத்து கலந்து கொண்டார். இந்தப் பேரணியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT