மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 3000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடுமேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 3000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 3000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால்டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை குறைந்தது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
தற்போது டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாத காரணத்தால் பாசன தேவை அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு இன்று மாலை 3 மணி முதல் வினாடிக்கு 500 கன அடியிலிருந்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 106.77அடியாக இருந்தது அணைக்கு வினாடிக்கு 1270 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 73.89 டி.எம்.சியாக இருந்தது.