சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருள்மிகு சந்தோஷ சனிபகவான் சுவாமிக்கு சனிப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சனிப்பெயர்ச்சியையொட்டி அருள்மிகு சந்தோஷ சனிபகவான் உடனமர் நீலாதேதவி சுவாமிகளுக்கு சிறப்பு யாகப்பூஜைகள் செய்யப்பட்டு பின்னிட்டு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு, வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இக்கோவில் வளாகத்தில் உள்ள அருள்மிகு சந்தோஷ சனிபகவான் உடனமர் நீலாதேவியுடன் சேர்ந்து இருப்பதாலும் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.