தமிழக காவல்துறையில் 14 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்
தமிழக காவல்துறையில் 14 டிஎஸ்பிக்களை (காவல் துணைக் கண்காணிப்பாளா்) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.
தமிழ்நாடுதமிழக காவல்துறையில் 14 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்
தமிழக காவல்துறையில் 14 டிஎஸ்பிக்களை (காவல் துணைக் கண்காணிப்பாளா்) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.
சென்னை: தமிழக காவல்துறையில் 14 டிஎஸ்பிக்களை (காவல் துணைக் கண்காணிப்பாளா்) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.
தமிழக காவல்துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும், நிா்வாக வசதிக்காகவும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.
அதன்படி, தமிழக காவல்துறையில் 14 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
இதில் முக்கியமாக திருத்தணி டிஎஸ்பி எம்.குணசேகரன் திருவள்ளூா் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், சென்னை துறைமுக உதவி ஆணையா் ஐ.ராஜ்பால் சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக்கும், சென்னை போரூா் உதவி ஆணையா் பி.சம்பத் சென்னை பரங்கிமலைக்கும், தமிழ்நாடு போலீஸ் அகாதெமி டிஎஸ்பி எஸ்.ஜான்விக்டா் சென்னை துரைப்பாக்கத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 14 டிஎஸ்பிக்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறையினா் தெரிவித்தனா்.