முகப்பு
தமிழ்நாடு

பேரிடர் பாதிப்புகளில் இறால் வளர்ப்பையும் சேர்த்து வரும் காலங்களில் நிவாரணம் வழங்கிட கோரிக்கை

சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட இறால் விவசாயிகள் சங்க கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
சீர்காழியில் நடந்த இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க கூட்டம்.
பகிர்:

சீர்காழி: சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட இறால் விவசாயிகள் சங்க கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட  இறால் விவசாயிகள் சங்க தலைவராக பூம்புகார்.எம்.சங்கர்,செயலாளராக பேராசிரியர் எஸ்.ஜெயராமன்,பொருளாளராக நாராயணசாமி ஆகியோர் சங்க நிர்வாகிகளால் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் நடைபெற்ற கூட்டத்திற்கு எம்.சங்கர் தலைமை வகித்தார். தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

புதிய மயிலாடுதுறை மாவட்டம் தொடங்கிவைத்த  தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிசாமி, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பது, அரசின் சலுகைகளுக்கு நன்றி தெரிவிப்பது, சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமலும்,மாசு ஏற்படுத்தாமலும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இறால் வளர்ப்பு தொழிலை செயல்படுத்துவது, தொழிலில் உள்ள இடர்பாடுகளை களைந்திட அரசை வலியுறுத்துவது, மற்ற மாநிலங்கள் போல் இறால் வளர்ப்பு விவசாயிகளுக்கு மின்கட்டணத்தை குறைத்திடவும், பேரிடர் மேலாண்மையில் இறால் வளர்ப்பு தொழிலை சேர்த்து வரும் காலத்தில் வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்படும் இறால் விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →