முகப்பு
கூத்தாநல்லூரில் கொசு மருந்து இயந்திரம் வழங்கல்
தமிழ்நாடு

கூத்தாநல்லூரில் கொசு மருந்து இயந்திரம் வழங்கல்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் பொதக்குடியில், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள கொசு மருந்து அடிக்கும் இயந்திரம்  வழங்கப்பட்டது. 

தமிழ்நாடு

கூத்தாநல்லூரில் கொசு மருந்து இயந்திரம் வழங்கல்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் பொதக்குடியில், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள கொசு மருந்து அடிக்கும் இயந்திரம்  வழங்கப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
கூத்தாநல்லூரில் கொசு மருந்து இயந்திரம் வழங்கல்
பகிர்:

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் பொதக்குடியில், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள கொசு மருந்து அடிக்கும் இயந்திரம்  வழங்கப்பட்டது. 

பொதக்குடி நகரத்தில் கொசுத் தொல்லையை போக்கவும், மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன் குனியா உள்ள பல்வேறு நோய்களிலிருந்தும் நகர மக்களைக் காப்பாற்றும் நோக்கத்தில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக கிளைத் தலைவர் அ.சாகுல் ஹமீது மற்றும் ம.ம.க. கிளைச் செயலாளர் ஜெ.சாகுல் ஹமீது உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், பொதக்குடி சுன்னத்வல் ஜமாஅத் நிர்வாகத்திடம், கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் வழங்கக்கோரி, கோரிக்கை மனுவை வழங்கினர்.

பொதக்குடியில், அனைத்து இடங்களிலும், கொசுக்கள் அதிகமாக இருப்பதால், தாமாகவே தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள, கொசு மருந்து அடிக்கக் கூடிய இயந்திரம் கேட்டனர். அதைத் தொடர்ந்து, நிர்வாகத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் பேசியுள்ளனர். அதன்படி, துபாய் தொழிலதிபர் ஆர்.எஸ்.அப்துல் ஹமீது, பொதக்குடி நகரத்தின் பயன்பாட்டிற்காக ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புதிய கொசு மருந்து அடிக்கும் இயந்திரத்தை வழங்கினார்.

அந்த கொசு மருந்து அடிக்கும் இயந்திரத்தை, சுன்னத்வல் ஜமாஅத் நிர்வாகிகள், தமுமுக மற்றும் மமக நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில், தமுமுக கிளைச் செயலாளர் ந.அப்துல் ஹக்கீம், கிளையின் முன்னாள் செயலாளர் மு.நூர் முஹம்மது மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →