முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் 

தமிழகம் முழுவதிலும் திருவாதிரையை முன்னிட்டு சிவ ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெறுவது வழக்கம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
திருவாதிரையையொட்டி  ஆருத்ரா தரிசனத்தில் நடராஜருக்கு 11 கிலோ சந்தனம் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளித்த  மடவார்வளாகம் நடராஜர்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழகம் முழுவதிலும் திருவாதிரையை முன்னிட்டு சிவ ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் புதன்கிழமை திருவாதிரை முன்னிட்டு சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது

அந்தவகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர் அதன்படி புதன்கிழமை அதிகாலையிலேயே சமூக இடைவெளியுடன் ஆருத்ரா தரிசனம் காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் கோயில் முன்பாக காத்திருந்தனர்

இதனைத்தொடர்ந்து வைத்தியநாதசாமி கோவிலில் உள்ள நடராஜருக்கு சுமார் 11 கிலோ சந்தனம் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் நடராஜர் காட்சியளித்தார். இதற்கான ஏற்பாடுகளை வைத்தியநாதசுவாமி கோவில் தக்கார் இளங்கோவன் நிர்வாக அதிகாரி ஜவஹர் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments