மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி  கோவிலில் நடந்த திருவாதிரை விழாவில் உற்சவர் நடராஜர் சிவகாமி சமேதமாய் உள்பிரகாரத்தில் வலம் வந்தார். 
தமிழ்நாடு

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் திருவாதிரை விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் கோவிலில் புதன்கிழமை திருவாதிரை விழாவை முன்னிட்டு நடராஜர் சுவாமி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. 

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் கோவிலில் புதன்கிழமை திருவாதிரை விழாவை முன்னிட்டு நடராஜர் சுவாமி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. 

இவ் விழாவையொட்டி மூலவர் நடராஜப் பெருமானுக்கு சந்தனம் கலையப்பட்டு பின்னர் மூலவருக்கும் உற்சவருக்கும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் நடராஜருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் சன்னதியில் சிவகாமி சமேத உற்சவமூர்த்திக்கும் அபிஷேகம் நடத்தி மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் அலங்கார தீபாரதனைகள்  நடைபெற்றது. 

அதன்பின் உற்சவர் நடராஜர் சுவாமி கோவில் உள்பிரகாரத்தை மூன்றுமுறை வலம் வந்து கோவில் மண்டபம் சென்றடைந்தார். 

திருவாதிரை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை தரிசனம் செய்தனர். 

கோவில் பரம்ரை ஸ்தானீகம் சக்கரைப்பட்டர் மற்றும் ராஜேஸ் பட்டர்,குமார் பட்டர் ஆகியோர் சுவாமிக்கான பூஜைகளை நடத்தி வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சந்திர கிரகணம் - புகைப்படங்கள்

அழகான ராட்சஷி... ஜாக்குலின்!

அடுத்த 3 மணிநேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை!

உத்தரகண்ட்டில் மேகவெடிப்பு: மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரம்!

ஜம்மு - காஷ்மீரில் முதல்முறையாக பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எம்எல்ஏ கைது: வலுக்கும் கண்டனம்!

SCROLL FOR NEXT