தமிழ்நாடு

கொண்டா ரெட்டி சாதிச் சான்று வழங்க மறுக்கும் சார் ஆட்சியரை கண்டித்து ஆதர் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்

DIN

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பண்ணவாடியில் கொண்டா ரெட்டி சாதிச் சான்று கேட்டு ஆதார் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பண்ணவாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொண்டா ரெட்டி இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாதிச்சான்று கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படுவதில்லை. நீதிமன்றத்தில் முறையிட்ட 20 நபர்களுக்கு சாதிச் சான்று வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆனாலும் ஒன்றரை ஆண்டுகளாக சான்றிதழ் வழங்கப்படவில்லை. உடனடியாக சாதிச் சான்று வழங்க வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் ஏற்கனவே தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினார்கள். இரண்டாம் கட்டமாக சாதிச்சான்று கிடைக்காத பள்ளி மாணவ, மாணவியர் மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இப் போராட்டங்களுக்கு வருவாய்த்துறையும் அரசும் செவி சாய்க்காத காரணத்தால் வியாழக்கிழமை கொண்டா ரெட்டி மக்கள் தங்களது ஆதார் அடையாள அட்டைகளை பண்ணவாடி கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்த வந்தனர். பண்ணவாடி பேருந்து நிறுத்தத்திலிருந்து பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்த மாணவ, மாணவியர் மற்றும் மக்களும் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

கிராம நிர்வாக அலுவலர் வராத காரணத்தால் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்தனர். 

பின்னர், காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. அடுத்த கட்ட போராட்டம் குறித்து சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து அறிவிப்பதாக கொண்டா ரெட்டி நலச் சங்கத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

SCROLL FOR NEXT