தமிழ்நாடு

மத்திய பட்ஜெட்டில் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்

DIN

மத்திய பட்ஜெட்டில் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
 இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
 மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி திட்டம் எதுவும் இல்லை. 250 ரயில்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு, தனியார் முதலீட்டுடன் ரயில்களை இயக்கும் திட்டத்தைக் கொண்டு வந்து ரயில்வே துறையைத் தனியாருக்கு தாரை வார்க்கும் நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மிகக் குறைவாக உள்ளது.
 பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மேலே கொண்டு வருவதற்கான திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 புதுவையில் வளர்ச்சியைக் கொண்டு வர எந்த உதவியும் மத்திய அரசிமிருந்து கிடைக்கவில்லை என்பது இந்த பட்ஜெட்டில் தெரிகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு புதுவை மாநிலத்தைப் புறக்கணித்துள்ளது என்றார் முதல்வர் நாராயணசாமி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT