தமிழ்நாடு

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கரோனா பரிசோதனை

DIN

சிங்கப்பூரில் இருந்து காய்ச்சலுடன் திருச்சி வந்த மதுரையைச் சேர்ந்த பயணிக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு திருச்சிக்கு சனிக்கிழமை நள்ளிரவு மூணு மணிக்கு ஸ்கூட் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி சேர்ந்த அருண் (27) என்ற பயணிக்கு கரோனா நோய் பாதிப்பு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரை உடனடியாக மருத்துவ குழுவினர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அதற்காக ஆய்வினை மேற்கொண்டனர். திருச்சி அரசு மருத்துவமனையின் சிறப்பு வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து காய்ச்சலுடன் திருச்சி வந்த மதுரையைச் சேர்ந்த பயணிக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்ததாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து வைரஸ் நோய் தொற்றும் ஒரேமாதிரியானதுதான். எனவே கரோனா வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டியதில்லை, உரிய சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடியது என்று திருச்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வனிதா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT