முகப்பு
தமிழ்நாடு

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்: முதல்வர் அறிவிப்பு

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:47 PM
பகிர்:

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

சேலம் மாவட்டம், தலைவாசலில் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து விழாவில் பேசிய அவர், 'தமிழகத்தில் மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தது திமுக தான். ஆனால், அதிமுக அரசுதான் கொண்டு வந்தது என்று அவர்கள் போராட்டம் நடத்தி பிரச்னையை கிளப்புகிறார்கள்.

டெல்டா பகுதிகள் கடல் நீர் சார்ந்த பகுதியாக இருக்கிறது. கடல் நீர் நிலத்திற்குள் புகுந்துவிடும் வாய்ப்பு இருப்பதால் இதனை பாதுகாக்க வேண்டியது அவசியம். 

எனவே டெல்டா பகுதியை பாதுகாத்திட ஒரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை இங்கு நான் வெளியிட விரும்புகிறேன். காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும். மேலும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து இதற்காக தனி சட்டம் இயற்றப்படும். டெல்டாவிவசாயிகளின் குமுறல்களை உணர்வுப்பூர்வமாக தெரிந்துகொண்டு இந்த அறிவிப்பை ஒரு விவசாயி என்ற முறையில் வெளியிடுகிறேன்.  விவசாயிகள் துன்பங்கள் துயரங்கள் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்' என்று தெரிவித்தார். 

மேலும்,  என்னதான் மத்திய அரசு திட்டம் கொண்டுவந்தாலும் மாநில அரசு தடையில்லா சான்று அளிக்காமல் அங்கு பணிகளைத் தொடர முடியாது. மக்கள் நலனைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அதிமுக அரசு ஒருபோதும் மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு தடையில்லா சான்று வழங்காது' என்று கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →