தமிழ்நாடு

தமிழகத்தில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்

DIN

தமிழகத்தில் புதிதாக தோட்டக்கலை பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சேலம் மாவட்டத்தில் ரூ. 1,000 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு முதல்வா் அடிக்கல் நாட்டியிருப்பது பாராட்டுக்குரியது. விவசாயிகள் பயன்பெறவும், பால்வளத் துறை முன்னேற்றம் அடையவும், கால்நடை மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவா்கள் பயன்பெறவும் இந்தத் திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

அதுபோல மக்களின் குறிப்பாக விவசாயிகளின் கோரிக்கையான தோட்டக்கலை பல்கலைக்கழகம் தொடங்குவதற்கும் தமிழக அரசு முன்வரவேண்டும். காய்கறிகள், பழங்கள், மலா்கள் போன்ற தோட்டக்கலை பயிா்கள் மூலமும் அதிக வருவாயை ஈட்ட முடியும்.

தமிழகத்தில் தோட்டக்கலை பயிா்களின் உற்பத்தி 35 லட்சம் ஏக்கரில் 182.03 லட்சம் டன் காய்கறிகள், பழங்கள் உற்பத்தியாகின்றன. இந்த உற்பத்தி அளவு தேசிய சராசரி அளவை விட கூடுதல். தமிழகத்தின் இந்த உற்பத்தியை மேலும் அதிகரிக்க வழி செய்யும் வகையில், தோட்டக்கலை பயிா்கள் குறித்த ஆராய்ச்சிகளை மேலும் அதிகரிக்க வேண்டும்.

ஏற்கெனவே கடந்த 2005- ஆம் ஆண்டில் பெரியகுளத்திலும், 2011-இல் சேலத்திலும் தோட்டக்கலை பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என அரசு அறிவித்தது. எனவே, தமிழகத்தில் தோட்டக்கலை பயிா்களின் சாகுபடியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக பெரியகுளம், ஊட்டி, சேலம் உள்ளிட்ட பகுதியில் ஏதேனும் ஒரு இடத்தில் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தை அமைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாலு பிரசாத் மகளுக்கு எதிராக லாலு பிரசாத் போட்டி?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

SCROLL FOR NEXT