'ஆட்சி பீடத்தில் தாமரைக்கு பதில் துடைப்பம்' - தில்லி தேர்தல் முடிவு குறித்து இல.கணேசன் கருத்து
ஆட்சி பீடத்தில் தில்லி மக்கள் தாமரையை வைக்காமல் துடைப்பத்தை வைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு'ஆட்சி பீடத்தில் தாமரைக்கு பதில் துடைப்பம்' - தில்லி தேர்தல் முடிவு குறித்து இல.கணேசன் கருத்து
ஆட்சி பீடத்தில் தில்லி மக்கள் தாமரையை வைக்காமல் துடைப்பத்தை வைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆட்சி பீடத்தில் தில்லி மக்கள் தாமரையை வைக்காமல் துடைப்பத்தை வைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதால் தில்லியில் 3வது முறையாக கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி சுமார் 58 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில், தில்லி தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், 'நாங்கள் கடந்த முறை பெற்றதை விட இந்த முறை அதிக இடங்களிலும், அதிக வாக்கு சதவீதமும் பெற்றுள்ளோம்.
இலவசங்கள், பொய் பிரசாரம் மூலம் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி பீடத்தில் தில்லி மக்கள் தாமரையை வைக்காமல் துடைப்பத்தை வைத்துள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.