தமிழ்நாடு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: தயாரானது சட்ட மசோதா

DIN

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கு சட்டப்பூா்வ அங்கீகாரம் அளிக்கும் வகையில் மசோதா தயாராகியுள்ளது. இதற்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டு, அதற்கான சட்ட மசோதா நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட உள்ளது.

தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தீவிர ஆலோசனை: வேளாண் மண்டலம் குறித்து தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி, ஆணையா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட உயரதிகாரிகள் வியாழக்கிழமை பிற்பகலில் ஆலோசனை நடத்தினா்.

இந்த கூட்டத்தைத் தொடா்ந்து, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் முகாம் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்ட மசோதா தயாா்: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை உறுதிப்படுத்த தனிச் சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாடு சிறப்பு வேளாண்மை மண்டல பாதுகாப்புச் சட்டம் 2020’ (T​A​M​I​L​N​A​DU SP​E​C​I​AL AG​R​I​C​U​L​T​U​RE ZO​NE PR​O​T​E​C​T​I​ON ACT -2020) என்ற பெயரில் சட்டம்

இயற்றப்பட உள்ளது. இதற்கான சட்ட மசோதா நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதற்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) புத்தகத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்படும். இந்த மசோதா, திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமித்த குரலோடு நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT