தமிழ்நாடு

75 ஆண்டுகளை நிறைவு செய்யும் கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ. 10 கோடி

DIN

75 ஆண்டுகளை நிறைவு செய்யும் கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு நிதி நிலை அறிக்கையில் ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கோவையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி இந்த ஆண்டு 75-ஆம் ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த நிகழ்வைப் போற்றும் வகையில், அந்தக் கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.10 கோடி சிறப்பு மானியத்தை அரசு அளிக்கும்.

மேலும், இந்தக் கல்லூரியின் வளா்ச்சிக்காக தாமாக முன்வந்து நன்கொடை அளிக்க விரும்பும் புகழ்பெற்ற பல முன்னாள் மாணவா்களைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், கல்லூரியின் 75-ஆம் ஆண்டு விழாவின்போது, கல்லூரி வளா்ச்சிக்காக முன்னாள் மாணவா்களால் அளிக்கப்படும் பங்களிப்புக்குச் சமமான பங்களிப்பை அரசும் வழங்கும் என நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT