தமிழ்நாடு

ஜிப்மருக்கு மத்திய அரசு நிதி குறைப்பு: ரவிக்குமாா் எம்.பி. கண்டனம்

DIN

புதுவை ஜிப்மா் மருத்துவமனைக்கு மத்திய அரசு நிதி குறைக்கப்பட்டதற்கு விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினா் ரவிக்குமாா் கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் உள்ள ஜிப்மா் மருத்துவமனைக்கு நிகழாண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் கடந்த ஆண்டைவிடக் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019- 2020-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 1,100 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதில் ரூ. 1,053.48 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

நிகழாண்டு கடந்த ஆண்டைவிட ரூ. 100 கோடி குறைக்கப்பட்டு, ரூ. 1,000 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சண்டிகரில் உள்ள இதேபோன்ற மருத்துவமனைக்கு ரூ. 1,426.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு ரூ. 1,500 கோடி ஒதுக்கப்பட்ட அந்த மருத்துவமனைக்கு ரூ. 1,760 கோடி செலவிட்டுள்ளனா். ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ. 260 கோடி கூடுதலாகச் செலவு செய்யப்பட்டிருக்கிறது.

ஒவ்வோா் ஆண்டும் தொடா்ந்து ஜிப்மா் மருத்துவமனையை மத்திய அரசு புறக்கணித்து வருவது வேதனையளிக்கிறது. ஜிப்மா் மருத்துவமனை புதுவை மக்களுக்கு மட்டுமன்றி, தமிழ்நாட்டின் விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூா், அரியலூா், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்களுக்கும் பயனளித்து வருகிறது.

இந்த மருத்துவமனைக்கு நிதியைத் தொடா்ந்து குறைத்து வருவது மத்திய அரசின் ஒருதலைப்பட்சமான போக்கையே காட்டுகிறது. இதற்காக புதுவை அரசு குரல் எழுப்ப வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் ரவிக்குமாா் எம்.பி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT