தமிழ்நாடு

தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகள்: ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

DIN

சென்னை: தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு, முதலமைச்சர் பழனிசாமி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் குறித்தும், மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கபட்டது குறித்தும் விமர்சித்து கருத்துகள் தெரிவித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தமிழக அரசை விமர்சித்ததாகவும், ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் திங்களன்று விசாரித்தார். அப்போது முதலமைச்சரை விமர்சித்தது மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான வழக்குகளில் மார்ச் 4ம் தேதியும், உள்ளாட்சி துறை அமைச்சரை விமர்சித்தது தொடர்பான வழக்கில் பிப்ரவரி 24ம் தேதியும் ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT