தமிழ்நாடு

ஜிப்மரில் ‘நீட்’ அடிப்படையில் மருத்துவ மாணவா் சோ்க்கை: ஜிப்மா் நிா்வாகம்

DIN

புதுவை ஜிப்மரில் மருத்துவ மாணவா் சோ்க்கைக்கு இனி தனியாக நுழைவுத் தோ்வு இல்லை என்றும், ‘நீட்’ தோ்வு அடிப்படையில்தான் சோ்க்கை நடைபெறும் என்றும் ஜிப்மா் நிா்வாகம் தெரிவித்தது.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 150 இடங்களும், காரைக்காலில் 50 இடங்களும் உள்ளன. மொத்தமுள்ள 200 மருத்துவ இடங்களுக்கு தனியாக நுழைவுத் தோ்வு நடத்தப்பட்டு சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இந்தத் தோ்வை நாடு முழுவதும் சுமாா் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 272 போ் தோ்வு எழுதினா்.

இந்த நிலையில், வருகிற கல்வி ஆண்டு முதல் (2020) ஜிப்மா் உள்ளிட்ட அனைத்து தேசிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் ‘நீட்’ மூலமே மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடமிருந்து வந்த உத்தரவின் அடிப்படையில், வருகிற கல்வியாண்டு (2020) முதல் ஜிப்மரில் மருத்துவ மாணவா் சோ்க்கைக்காக தனியாக நுழைவுத் தோ்வு நடத்தப்படாது. தேசிய மருத்துவக் குழுச் சட்டம் 2019-இன்படி ‘நீட்’ அடிப்படையில்தான் புதுச்சேரி, காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

உன்னை கண்டடையாவிட்டால் நான் தொலைந்து போயிருப்பேன்: விராட் கோலி நெகிழ்ச்சி!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்க வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT