முகப்பு
தமிழ்நாடு

புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.31,624க்கு விற்பனை 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமையான இன்று காலை நிலவரப்படி மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 

தமிழ்நாடு

புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.31,624க்கு விற்பனை 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமையான இன்று காலை நிலவரப்படி மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:54 PM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமையான இன்று காலை நிலவரப்படி மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 

அதன்படி, சென்னையில் புதன்கிழமையான இன்று(பிப்.19) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.27 அதிகரித்து ரூ.3,953க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.216 அதிகரித்து, ரூ.31,624க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 36 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,512 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. சில்லறை விற்பனையில் ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.51.60க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து ரூ.51.600-க்கும் விற்கப்படுகிறது. 

புதன் கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3,953

1 சவரன் தங்கம் ..................... 31,624

1 கிராம் வெள்ளி .................. 51.60

1 கிலோ வெள்ளி ................. 51,600

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3,926

1 சவரன் தங்கம் ..................... 31,408

1 கிராம் வெள்ளி .................. 50.60

1 கிலோ வெள்ளி ................. 50,600

முழு கட்டுரையைப் படிக்க →