முகப்பு
தமிழ்நாடு

சென்னை ஐஐடியில் இப்படியா? பெண்கள் கழிவறையை விடியோ எடுத்த அலுவலர் கைது

சென்னை ஐஐடியில் மாணவி ஒருவர் கழிவறையைப் பயன்படுத்தும் போது அதனை விடியோவில் பதிவு செய்த ஐஐடி அலுவலர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:55 PM
பகிர்:


சென்னை: சென்னை ஐஐடியில் மாணவி ஒருவர் கழிவறையைப் பயன்படுத்தும் போது அதனை விடியோவில் பதிவு செய்த ஐஐடி அலுவலர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.

பெண்கள் கழிவறையில் இருந்த ஒரு துளையில் செல்போனை வைத்து, அதன் மூலம் விடியோ எடுத்த விண்வெளி பொறியியல் துறையின் ஐஐடி சென்னை திட்ட அலுவலர் சுபம் பானர்ஜிதான் பிடிபட்ட நபராவார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் கழிவறைக்குச் சென்ற பிஎச்டி மாணவி ஒருவர், அங்கிருந்த துளை வழியாக, பின்புறத்தில் யாரோ நிற்பது போன்று தெரிந்ததால், சுவரைச் சுற்றிக் கொண்டு அங்குச் சென்றார்.

அப்போதுதான், அங்கு கையில் செல்போனுடன் சுபம் பானர்ஜி நின்றிருப்பதைப் பார்த்தார். சுபம் பானர்ஜியை கையும் களவுமாகப் பிடித்த மாணவி, காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தார்.

இது குறித்து விசாரித்து வருவதாகவும், சுபம் பானர்ஜியின் செல்போன் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்படுவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.