முகப்பு
தமிழ்நாடு

தங்கம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்வு: ஒரு சவரன் ரூ.32,576க்கு விற்பனை

ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமையான இன்று சற்று அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழ்நாடு

தங்கம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்வு: ஒரு சவரன் ரூ.32,576க்கு விற்பனை

ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமையான இன்று சற்று அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:56 PM
பகிர்:

ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமையான இன்று சற்று அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. 

அமெரிக்க-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக, ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை உயர்ந்தது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சவரன் தங்கம் ரூ.32 ஆயிரத்தைத் தாண்டியது. போா் பதற்றம் குறைந்த பிறகு, தங்கம் விலை குறைந்தது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகின்றது. 

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமையான இன்று(பிப்.22) சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, ரூ.32,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.22 உயர்ந்து, ரூ.4,072-க்கு விற்பனையாகிறது. முன் எப்போது இல்லாத அளவிற்கு கடந்த 38 நாள்களில் மட்டும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேல் தங்கம் விலை உயர்ந்துள்ளது. 

அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயர்ந்து ரூ.52.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.52,400 ஆகவும் விற்கப்படுகிறது. 

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 4,072

1 சவரன் தங்கம் ..................... 32,576

1 கிராம் வெள்ளி .................. 52.40

1 கிலோ வெள்ளி ................. 51,400

வெள்ளிக்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ..................... 4,051

1 சவரன் தங்கம் ..................... 32,408

1 கிராம் வெள்ளி .................. 52.50

1 கிலோ வெள்ளி ................. 52,500

முழு கட்டுரையைப் படிக்க →