தமிழ்நாடு

ஜெ. பிறந்தநாள் விழா: திருப்பூரில் 72 ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி அன்னதானம் 

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, திருப்பூர் தெற்கு தொகுதி சார்பில் 72 இடங்களில் 72 ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி அன்னதானத்தை சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் தொடக்கி வைத்தார்.

DIN

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, திருப்பூர் தெற்கு தொகுதி சார்பில் 72 இடங்களில் 72 ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி அன்னதானத்தை சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் தொடக்கி வைத்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு தொகுதி சார்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், திருப்பூர் தெற்கு தொகுதியில் 72 இடங்களில் 72 ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி திருப்பூர் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் இருந்து தயார் செய்யப்பட்ட உணவுகளை ஆட்டோக்களில் ஏற்றி தெற்கு தொகுதியில் விநியோகம் செய்யப்பட்டது. இந்த அன்னதானத்தை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் சார்பு அணி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, தம்பி மனோகரன், மார்க்கெட் சக்திவேல், எஸ்.பி.என்.பழனிசாமி, அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், கூட்டுறவு நகர வங்கி தலைவர் பி.கே.எஸ். சடையப்பன், கண்ணபிரான், வேலம்பாளையம் கண்ணப்பன், எஸ்.பி.என்.ஸ்ரீதரன்,  தம்பி சண்முகம், ஆண்டவர் பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் இந்திய அணி!

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் ‘ஷிபு சோரன்!’ -ஜார்க்கண்ட் முதல்வர் உருக்கம்!

எஸ்எஸ்சி தேர்வர்கள் போராட்டம்: தேர்வு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

SCROLL FOR NEXT