பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாவட்ட செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்த அக்கட்சியினர் 
தமிழ்நாடு

பெரம்பலூரில் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் கொண்டாட்டம்

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72-வது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72-வது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஜெயலலிதா உருவ சிலைக்கு, பெரம்பலூர் மாவட்ட செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.டி
ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள அன்பகம் சிறப்புப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கும்,  பெரம்பலூர் கௌதம புத்தர் அறக்கட்டளையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், முதியோர், குழந்தைகளுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், திங்கள்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, பெரம்பலூர் சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம் காலனி ஆகிய பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, கூட்டுறவுத் துறை சார்பில் அம்மா மருந்தகம் திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில், பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா தமிழ்செல்வன், மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர்கள் ஆர்.பி. மருதராஜா, மா. சந்திரகாசி, நகரச் செயலர் ஆர். ராஜபூபதி, ஒன்றியச் செயலர்கள் என்.கே. கர்ணன், பி. கிருஷ்ணசாமி, மாவட்ட அணி செயலர்கள் எம்.என். ராஜாராம், செல்வக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் இந்திய அணி!

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் ‘ஷிபு சோரன்!’ -ஜார்க்கண்ட் முதல்வர் உருக்கம்!

எஸ்எஸ்சி தேர்வர்கள் போராட்டம்: தேர்வு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

SCROLL FOR NEXT