கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72ஆம் பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக கொண்டாடினர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிற்கு பேரூராட்சி அதிமுக நிர்வாகிகள் பி.டி.சி.ராஜேந்திரன், எம்.ஜி.சேகர் தலைமை தாங்கினர்.
அதிமுக நிர்வாகிகள் வெற்றி ரவி, லட்சுமணன் சிராஜுதின், கே.உதயகுமார், சுரேஷ்குமார், தீபக்செந்தில், சரவணன், நாகப்பன், சுரேஷ், சிவசங்கர், கேசவன், அப்துல் கரீம், மகளிர் அணி நிர்வாகி சுசிலா முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு, பொதுக்குழு உறுப்பினர் அபிராமன் பங்கேற்று ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என 500பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் ஒன்றிய மாணவர் அணி நிர்வாகியும் கண்ணம்பாக்கம் ஊராட்சி தலைவரான சதீஷ், முன்னாள் கவுன்சிலர்கள் கோபி, இமாச்சலம், ஒன்றிய பாசறை நிர்வாகி திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.