தமிழ்நாடு

சிஏஏ என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: சரத்குமார்

DIN

சிஏஏ என்ற பெயரில் வன்முறையில ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு தில்லியில் உள்ள ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே நடைபெறும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. இதற்கிடையே, இந்தப் போராட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சிஏஏக்கு ஆதரவாகவும் ஜாஃப்ராபாத் அருகில் உள்ள மெளஜ்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இரு தரப்பினரும் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். 

இதைத் தொடர்ந்து வன்முறை மெளஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவியது. எனவே, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர மெளஜ்பூர், பிரம்மபுரி, கஜோரி காஸ், பஜன்புரா உள்ளிட்ட பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் வன்முறைப் பகுதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பும் நடத்தினர். எனினும், ஆங்காங்கே வன்முறை தொடர்கிறது. தில்லி வன்முறைக்கு இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தனது டிவிட்டரில், சிஏஏ என்ற பெயரில் நடந்தேறும் வன்முறை, நாட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் குலைக்கும் எந்த ஒரு செயலும் இனி தொடராமல் செய்வது நமது ஒவ்வொருவரது கடமை. அரசாங்கம் பாரபட்சமின்றி வன்முறையில ஈடுபடும் எவராக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை-இலங்கை கப்பல் சேவை மீண்டும் மாற்றம்!

புதிய மக்களவையில் முஸ்லிம்கள் எத்தனை பேர்?

போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: பாஜக தொண்டர் கொலை!

‘மின்னும் பேரொளி’ சான்யா மல்ஹோத்ரா...!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT