முகப்பு
தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் அதிரடி உத்தரவு

தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின் போது நிச்சயம் அணிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:00 PM
தமிழ்நாடு சட்டப்பேரவை
பகிர்:


சென்னை: தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின் போது நிச்சயம் அணிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் பணி நேரத்தில் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டையை அணிவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து, பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத்துறை சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின் போது கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும். 

அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவதை துறைத் தலைவர்களும், மாவட்ட ஆட்சியர்களும் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு அணியாதவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.