தமிழ்நாடு

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.32,656க்கு விற்பனை

DIN


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமையான இன்று சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கரோனா வைரஸ் தாக்கத்தால் சா்வதேச அளவில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, வரவுள்ள அமெரிக்க தோ்தல் காரணமாக தொழில்துறை சாா்ந்த பங்கு முதலீடு மந்தம் ஆகிய காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வந்தது. இதனால், தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வந்த நிலையில், மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. 

அதன்படி, சென்னையில் வியாழக்கிழமையான இன்று(பிப்.27) ஆபரணத் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.32,656-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.4,082-க்கு விற்பனையாகிறது.

அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.51.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.51,100 ஆகவும் விற்கப்படுகிறது. 

வியாழக்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ..................... 4,082

1 சவரன் தங்கம் ..................... 32,656

1 கிராம் வெள்ளி .................. 51,10

1 கிலோ வெள்ளி ................. 51,100

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 4,080

1 சரவன் தங்கம் ..................... 32,640

1 கிராம் வெள்ளி .................. 51.40

1 கிலோ வெள்ளி ................. 51,400
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT