தமிழ்நாடு

திருவாரூரில் தவ்ஹீத் அமைப்பு சார்பில் சிஏஏ எதிர்ப்பு தர்னா

குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் அமைப்பு சார்பில் தர்னா போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் அமைப்பு சார்பில் தர்னா போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைத் திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பிப்ரவரி 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் தர்னா போராட்டத்தை அறிவித்து நடத்தி வருகிறது.

இந்த நிலையில், திருவாரூரில் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற தர்னா போராட்டத்துக்கு திருவாரூர் கிளைத் தலைவர் இக்பால் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் தாவூத் கைசர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

இதேபோல், அடவங்குடி, பொதக்குடி, புலிவலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தர்னா போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.யில்: சிறுத்தை தாக்கி நான்கு வயது சிறுமி பலி

”கால தாமதம் உங்களுக்குத்தான்!” பத்திரிகையாளர்களைக் கடிந்துகொண்ட பிரேமலதா! | DMDK

சூடான், லெபனான் வெளியுறவு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

பெங்களூருவில் தொழிலதிபர் சி.ஜே. ராய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

வேதாரண்யம் : தந்தை அடித்துக் கொலை; மகன் கைது

SCROLL FOR NEXT