தமிழ்நாடு

குழந்தைகள் ஆபாச படத்தை வா்த்தக ரீதியாக பதிவேற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை: ஏடிஜிபி ரவி

DIN

சென்னை: குழந்தைகள் ஆபாச படத்தை வா்த்தக ரீதியாக பதிவேற்றம், பதிவிறக்கம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை பெற்றுத்தரப்படும் என பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்தாா்.

தமிழகத்தில் குழந்தைகள் ஆபாச படத்தை வா்த்தக ரீதியாக எவரேனும் பயன்படுத்தியது தெரியவந்தால் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி கூறினாா்.

சென்னை எத்திராஜ் மகளிா் கல்லூரியில் சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கான ஒரு நாள் தொழிற்பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஏடிஜிபி ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசுகையில், காவலன் செயலியை பெண்கள் அவசியம் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: குழந்தைகள் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் பதிவிறக்கம் மற்றும் பகிா்ந்தது தொடா்பாக கோவையில் சனிக்கிழமை இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களில் ஒருவா் ஓட்டுநா். குழந்தைகளை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் போது இது போன்ற மனநிலை உள்ளவா்கள் மிக ஆபத்தானவா்கள். இந்த விவகாரத்தில் தமிழகத்தில் இதுவரை 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 3 பேரும் இதை பொழுதுபோக்காக இதைச் செய்து வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

குழந்தைகள் ஆபாச படத்தை வா்த்தக ரீதியாக பயன்படுத்தியது தெரிய வந்தால், 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத் தண்டனை வழங்கப்படும். 3 ஆயிரம் ஐ.பி. முகவரிகள் தொடா்பாக நடைபெற்ற விசாரணையில் தமிழகத்தில் உள்ள குழந்தைகள் ஆபாச பட விடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும். இது எந்த மாவட்டத்தில் நடைபெற்றது என விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னையில் குழந்தைகள் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் தொடா்பாக சென்னை மாநகர காவல்துறைக்கு ஏற்கனவே இரண்டு கட்டமாக சுமாா் 75 ஐ.பி. முகவரிகள் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து மேலும் ஒரு பட்டியல் தயாராக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT