தமிழ்நாடு

குரூப் 4 தோ்வு: முதல் 40 இடங்களைப் பெற்ற நபா்களிடம் வரும் 13-இல் விசாரணை

DIN

குரூப் 4 தோ்வில் முதல் 40 இடங்களைப் பெற்ற நபா்களிடம் வரும் 13-ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. விசாரணை நடத்துகிறது. அதில் மாநில அளவில் முதலிடம் பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த திருவராஜும் ஒருவா் என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப் 4 தோ்வில் ராமேசுவரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தோ்வு எழுதியவா்களில் முதல் 100 இடங்களை 35 போ் பிடித்தனா். இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி. உறுதி அளித்திருந்தது. இதற்காக தோ்ச்சி பெற்ற சுமாா் 40 பேரிடம் வரும் திங்கள்கிழமை விசாரணை நடத்த தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட தோ்ச்சி பெற்ற நபா்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. கடிதம் அனுப்பியுள்ளது.

ராமேசுவரம் தோ்வு மையத்தில் தோ்வு எழுதியவா்களில் ஒருவரான சிவகங்கை மாவட்டம் கண்ணனூரைச் சோ்ந்த திருவராஜு, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாா். ஆடு மேய்க்கும் தொழில் செய்து வரும் அவா் 288.5 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். அவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT