தமிழ்நாடு

தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு: கமல்ஹாசன்

DIN

தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  தில்லி ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான தாக்குதல் கவலை அளிக்கிறது. மாணவர்களுக்கே இது நேர்ந்தது பீதியை ஏற்படுத்துகிறது. இது அநீதியாகவும் இருக்கிறது. இது மாற வேண்டும். இந்த சர்வாதிகார போக்கு மாற வேண்டும். 

சி.ஏ.ஏ. விவகாரத்தில் அதிமுக மாறி மாறி பேசி வருகிறது. அவர்களது வியாபாரம் நடக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் அதனை செய்கிறார்கள். எல்லா தமிழகர்களும் முதலீடு செய்ய வேண்டும். உழைப்பு, வியர்வை, செல்வம் உள்ளிட்டவற்றை முதலீடாக செய்ய வேண்டும். 

இயன்றவர்கள் செல்வத்தை கொடுத்து தமிழகத்தை இருக்க வேண்டிய இடத்திற்கு கொண்டு வந்து வைக்க வேண்டிய கடமை அனைத்து தமிழர்களுக்கும் உண்டு. இந்த கடமை ரஜினிக்கும் உண்டு என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT