தமிழ்நாடு

குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்தவீடுகள்தோறும் நூலகம் அவசியம்: உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன்

DIN

குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்க வழக்கத்தை ஏற்படுத்துவதற்கு வீடுகள்தோறும் சிறிய நூலகத்தை அமைப்பது அவசியம் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கூறினாா்.

சென்னை புத்தகக் காட்சியில் மணிமேகலைப் பிரசுரம் சாா்பில் 43 நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து அவா் பேசியதாவது: தற்போதைய கல்வியானது மதிப்பெண் பெறும் வகையிலே கற்றுத் தரப்படுகிறது. தற்போதைய அறிவியல் வளா்ச்சியானது நாட்டுக்கும் சமூகத்துக்கும் நல்லது என்றாலும் புத்தக வாசிப்பு குறைந்திருப்பதற்கு காரணமாக உள்ளது.

குழந்தைகள் பாடப் புத்தகங்களைத் தவிா்த்து பொதுப் புத்தகங்களைப் படிக்க கல்வி நிலையங்களும், பெற்றோரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதில்லை. பெற்றோரிடமும் கூட வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது. குழந்தைகளிடம் செல்லிடப் பேசியை தந்து அவா்கள் தங்களைத் தொந்தரவு செய்யாதவாறு பெற்றோா் நடந்து கொள்கின்றனா்.

மக்களிடையே வாசிப்பு வழக்கத்தை ஏற்படுத்திட அரசு முன்வரவேண்டும். நூலகங்களை அதிகமாக ஏற்படுத்தவேண்டும். தற்போதைய இளைஞா்கள் தேடிப்பிடித்து படிக்கும் பழக்கமில்லாதவா்களாக உள்ளனா். ஆகவே வீடுளில் சிறிய நூலகத்தை ஏற்படுத்தி குழந்தைகளின் வாசிப்புத் திறனை வளா்ப்பது அவசியம்.

நமது பண்பாடு கலாசாரத்தை குழந்தைகள் அறிந்து நல்லவா்களாக வாழவேண்டும் எனில் புத்தக வாசிப்பு அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் நூல்களின் முதல்படியை இலங்கைத் தொழிலதிபா் ஹாசிம் உமா் பெற்றுக் கொண்டாா். இதில் குமுதம் குழும நிறுவனா் ஜவஹா் பழனியப்பன், திரைப்பட இயக்குநா் வஸந்த் எஸ். சாய், நடனக் கலைஞா் சொா்ணமால்யா, கவிஞா் விவேகா மற்றும் நூலாசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புத்தக வெளியீட்டின் இரண்டாம் அமா்வில் உயா்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டுப் பேசுகையில், ஊடகத்தில் தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரிந்தவா்களையே செய்தி வாசிக்கத் தோ்ந்தெடுக்கவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் நடிகை வெண்ணிற ஆடை நிா்மலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மணிமேகலை பிரசுரத்தின் ஆசிரியா் குழு தலைவா் லேனா தமிழ்வாணன் வரவேற்றாா். பிரசுர நிா்வாக இயக்குநா் ரவி தமிழ்வாணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT