தமிழ்நாடு

சென்னையில் கடும் புகை மூட்டம்: முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் உள்பட15 விமானங்கள் தாமதம் 

DIN



போகி பண்டிகையையொட்டி  பழைய பொருட்களை எரித்ததால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் உள்பட 15 விமானங்கள் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னைக்கு வரவேண்டிய 20 விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 11.25 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையம் செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் மூடுபனி மற்றும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளதால், முதல்வர் செல்லும் விமானம் 1 மணி நேரம் தாமதமாக புறப்படும் எனவும், தில்லி, ஹைதராபாத், மும்பை போன்ற நகரங்களுக்கு செல்லும் 15க்கும் மேற்பட்ட விமானங்களும் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT