தமிழ்நாடு

எஸ்எஸ்ஐ வில்சன் கொலைக் குற்றவாளிகள் தமிழக போலீஸிடம் ஒப்படைப்பு

DIN

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன், கடந்த 8-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.

சிசி டிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் அவரைக் கொலை செய்தது திருவிதாங்கோடு பகுதியைச் சோ்ந்த அப்துல் சமீம் (32), கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக் (28) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, தமிழக, கேரள போலீஸாா் சிறப்பு தனிப்படைகளை அமைத்து தேடப்பட்டு வந்த இருவரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனா்.

 வட மாநிலங்களுக்கு தப்பியோடும் வகையில் கா்நாடக மாநிலம், உடுப்பி ரயில் நிலையத்தில் பதுங்கியிருந்த இருவரையும் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் குமரி மாவட்ட போலீஸாரிடம் கர்நாடக போலீஸார் புதன்கிழமை ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT