தமிழ்நாடு

கேரளத்துக்கு கடத்தப்பட்ட 20,000 லிட்டர் எரிசாராயம்: ஒசூர் அருகே பறிமுதல்

DIN


ஒசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் ஹரியாணாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 20,000 லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக எல்லைப் பகுதியான ஒசூர் ஜூஜூவாடியில் எரிசாராயம் கடத்தப்படுவதாக ஒசூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் இன்று (சனிக்கிழமை) வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது, சந்தேகத்தின் பெயரில் வந்த லாரியை சோதனை செய்ததில் 550 கேன்களில் 20,000 லிட்டர் எரிசாராயம் கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இவை ஹரியாணா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள சாலக்குடிக்கு கடத்தப்பட்டது என்பது தொடர் விசாரணையின் மூலம் தெரியவந்தது. 

இதையடுத்து, கடத்தி வரப்பட்ட 20,000 லிட்டர் எரிசாராயத்தைப் பறிமுதல் செய்த போலீஸார் மோகன் (32) மற்றும் சிவய்யா (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT