தமிழ்நாடு

என்னை தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தியவர்: பி.எச்.பாண்டியன் படத்தை திறந்துவைத்து துணை முதல்வர் பேச்சு

DIN

மறைந்த முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் உருவப்படத்தை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பேரவை உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,

அதிமுகவுக்கு தூணாக, அடித்தளமாக இருந்தவர் பி.எச்.பாண்டியன். 1,000 ஆண்டுகளானாலும் அதிமுக நீடித்து நிலைத்து நிற்கும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியதற்கு அடித்தளமாக இருந்தவர். சட்டப்பேரவையில் மட்டுமன்றி மக்களவையில் மிகவும் திறமையாக பணியாற்றியவர். என்னை தட்டிக் கொடுத்து இப்படித்தான் அரசியல் செய்ய வேண்டும் என்று ஊக்கப்படுத்துவார். அவருடைய நினைவு என்றும் நம்மிடையே இருக்கும்.

அதிமுக வளர்வதற்கு உறுதுணையாக இருந்த கருப்பசாமி பாண்டியன் இப்போது எங்களோடு வந்து விட்டார். எனவே அவர் இல்லையே என்ற கவலை இனி இல்லை. பி.எச்.பாண்டியனுக்கு அவருடைய சொந்த ஊரில் நினைவு மண்டபம் அமைக்கப்படும். அதை நானே முன்னின்று வழி நடத்தி கட்டி முடிப்பேன் என்று புகழஞ்சலி செலுத்தினார்.

மேலும் தமிழகத்தை நீண்ட நாள் ஆண்ட கட்சி என்ற பெருமை அதிமுகவுக்கே உள்ளது எனவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பின்னர் பேசிய ஆர்.பி.உதயகுமார், வானளாவிய அதிகாரம் பேரவைத் தலைவருக்கு உண்டு என்பதை உணர்த்தியவர் பி.எச்.பாண்டியன். எதையும் முன்கூட்டிய கணிக்கும் தீர்க்கதரிசி என்று புகழாரம் சூட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT