தமிழ்நாடு

தூத்துக்குடியில் மாறுவேடத்தில் சென்று 250 கிலோ கடல் அட்டை கடத்தலை முறியடித்த உதவி ஆய்வாளர்

DIN

தூத்துக்குடி மேட்டுபட்டி கடற்கரைப் பகுதியில் வடபாக உதவி ஆய்வாளர் மாறு வேடத்தில் சென்று 250 கிலோ கடல் அட்டை கடத்தலை முறியடித்தார்.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் கடல் அட்டை கடத்தப்படுவதாக தூத்துக்குடி வடபாகம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வடபாகம் உதவி ஆய்வாளர் சுந்தரம் மாறுவேடத்தில் கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டார். 

அப்போது ஒரு மினி வேனில் கடல் அட்டை கடத்தப்படுவதைக் கண்டு, அவர்களை மடக்கிப் பிடிக்கச் சென்றார். ஆனால், அதில் இருந்த 4 பேர் கடல் வழியாக தப்பி ஓடினர். 

இந்நிலையில், 250 கிலோ கடல் அட்டை மற்றும் ஆம்னி வேன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றார். தொடர்ந்து கடல் வழியாக தப்பிச் சென்ற நான்கு பேரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக கோபம் நீங்க.. ?

கருணாவும், காஞ்சிபுரம் இட்லியும்!

திரைக்கதிர்: பாலிவுட் ரவுண்ட் அப் !

எம்ஜிஆர் வழியில் விஜய் -செல்லூர் ராஜு பாராட்டு

கருடன் அப்டேட்!

SCROLL FOR NEXT