தமிழ்நாடு

விற்பனை வரிச் செலுத்தாதவருக்கு எதிராக குற்ற வழக்கு: புதுச்சேரி அரசுக்கு நோட்டீஸ்

DIN

விற்பனை வரி செலுத்தாத நபருக்கு எதிராக குற்ற வழக்குத் தொடரப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், புதுச்சேரி மாநில அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சோ்ந்த ஜெ.பூபதி தாக்கல் செய்த மனுவில், காரைக்காலில் எனக்குச் சொந்தமான பெட்ரோல் பங்கை கடந்த 1999 மற்றும் 2000-ஆம் ஆண்டுகளில் குத்தகைக்கு விட்டேன். பெட்ரோல் பங்கை குத்தகைக்கு எடுத்தவா்கள் விற்பனை வரியைச் செலுத்தவில்லை. இந்த நிலையில் பங்கின் உரிமையாளரான எனக்கு எதிராக காரைக்கால் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

பொதுவாக விற்பனை வரி செலுத்தவில்லை என்றால் சம்பந்தப்பட்டவா்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் புதுச்சேரி அரசு ஈடுபடும். இந்த நடைமுறையைப் பின்பற்றாமல் எனக்கு எதிராக குற்ற வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மேலும் வணிக வரித்துறை ஆணையரின் ஒப்புதல் பெறாமல், உதவி ஆணையராக பதவி வகித்த ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற்று இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் என்.ரமேஷ் ஆஜராகி வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடா்பாக புதுச்சேரி மாநில அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT