ரூ. 1,500 லஞ்சம் பெற்ற வழக்கில் செவிலியருக்கு மூன்றாண்டு சிறை: விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு
மகப்பேறு உதவித் தொகை பெற்றுத் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்ற வழக்கில் செவிலியருக்கு மூன்றாண்டு சிறை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மகப்பேறு உதவித் தொகை பெற்றுத் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்ற வழக்கில் செவிலியருக்கு மூன்றாண்டு சிறை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
உளுந்தூர்பேட்டை வட்டம் நத்தாமூர் அரசு துணை சுகாதார நிலையத்தில் பணியாற்றிவரும் செவிலியர் வளர்மதி (49) என்பவர், அருகே உள்ள கிளியனூர் பகுதியைச் சேர்ந்த பாக்கியம் என்பவரிடம், கடந்த 2016 அக்டோபர் மாதம் மகப்பேறு உதவித் தொகை பெறுவதற்காக, விண்ணப்பங்களை வழங்க ரூ. 1,500 லஞ்சம் பெற்றுள்ளார்.
இவரை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், லஞ்சம் பெற்ற வழக்கில் செவிலியர் வளர்மதிக்கு மூன்று ஆண்டு சிறையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.