தமிழ்நாடு

சங்ககிரி சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்புப் பூஜை

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சுவாமிகளுக்கு சிறப்புப் பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன. 

அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில்  உள்ள சுவாமிகள், நந்தி பகவான் சுவாமிகளுக்கு பிரதோஷத்தையொட்டி பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பக்தர்கள் யாரும் செல்லவில்லை. இக்கோயில் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ளதையடுத்து ஆகமவிதிகளின் படி கோயிலின் அர்ச்சகர் மட்டும் பூஜைகளை செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT