முகப்பு
தமிழ்நாடு

என்எல்சி கொதிகலன் விபத்து: காயமுற்ற அதிகாரி சிகிச்சை பலனின்றி மரணம்

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் காயமடைந்த அதிகாரி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து
பகிர்:


கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் காயமடைந்த அதிகாரி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள 2-ஆவது அனல் மின் நிலையத்தின் 5-ஆவது அலகில் புதன்கிழமை கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 தொழிலாளர்கள் நிகவிடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 

அதிகாரி ஒருவர், 5 நிரந்தரம் மற்றும் 11 ஒப்பந்தத் தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதில், மோகன் ராஜ் தவிர மற்றோர் சென்னையில் உள்ள உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் துணை தலைமை பொறியாளரான க.சிவக்குமார்(53) வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.