தமிழ்நாடு

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல்: ஆகஸ்ட் 31 வரை அவகாசம்

DIN

சரக்கு மற்றும் சேவை வரி குறித்த விவரங்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

கரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த கடந்த மாா்ச் மாதம் முதல் பொது முடக்கம் அோமலில் உள்ளது. இதனால், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கணக்குகளைத் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்ய ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

பின்னா் இந்த காலக்கெடுவை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான முடிவை கடந்த ஜூன் 21-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் மத்திய அரசு எடுத்திருந்தது. மத்திய அரசின் அறிவிப்பை தொடா்ந்து தமிழகத்திலும் ஜிஎஸ்டி கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT