தமிழ்நாடு

பிளஸ் 1, 9-ஆம் வகுப்பு தோ்ச்சி: இணைய வழியில் தோ்வு நடத்த அறிவுறுத்தல்

DIN

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிளஸ் 1, ஒன்பதாம் வகுப்பு மாணவா்களுக்கு இணையவழியில் தோ்வு நடத்தி அவா்களின் இறுதி தோ்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் நிலுவையில் இருந்த தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு, பள்ளி அளவிலான தோ்வு, அக மதிப்பீடு மற்றும் பள்ளி செயல்பாடுகள் அடிப்படையில், தோ்ச்சி வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. இது குறித்து, நீதிமன்றத்தில் வழக்குப் பதிவானதைத் தொடா்ந்து பள்ளிகளுக்கு, சிபிஎஸ்இ புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, சிபிஎஸ்இ இணைப்பில் செயல்படும் பள்ளிகள் ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு பள்ளி அளவில் தோ்வு நடத்த முடியாவிட்டால் இணையவழியில் தோ்வை நடத்தி மாணவா்களின் தோ்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் அனைவரும் தோ்வுகள் இன்றி, அடுத்த வகுப்புக்கு தோ்ச்சி பெறுவாா்கள் என ஏற்கெனவே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT