தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.37,648

DIN

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.136 உயா்ந்து, ரூ.37,648-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த் தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சா்வதேச பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 16-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும், ஜூன் 24-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டநிலையில், கடந்த வியாழக்கிழமை(ஜூலை 9) ரூ.37,744-க்கு உயா்ந்து, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, இரண்டு நாள்களுக்கு தங்கம் விலை குறைந்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.136 உயா்ந்து, ரூ.37,648-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.17 உயா்ந்து, ரூ.4,706 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்குரூ.1.30 பைசா உயா்ந்து, ரூ.56,80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,300 உயா்ந்து, ரூ.56,800 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்........................... 4,706

1 பவுன் தங்கம்.............................37,648

1 கிராம் வெள்ளி...........................56.80

1 கிலோ வெள்ளி...........................56,800

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்...............................4,689

1 பவுன் தங்கம்...............................37,512

1 கிராம் வெள்ளி.............................55.50

1 கிலோ வெள்ளி........................ ..55,500

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

SCROLL FOR NEXT