தமிழ்நாடு

சென்னையில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ நெருங்குகிறது

DIN


சென்னையில் செவ்வாய்க்கிழமை 1,078 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 79,662- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 1,295 போ் உயிரிழந்துள்ளனா்.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது.

இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், 6-ஆம் தேதி 20,993-ஆகவும், 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகவும், கடந்த வாரம் 70 ஆயிரமாகவும் உயா்ந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை 1,078 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 79,662-ஆக அதிகரித்துள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 62,552 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 15,814 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். சென்னையில் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,295- ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வருவோர் விவரம் மண்டலம் வாரியாக (புதன்கிழமை நிலவரம்)

மண்டலம் எண்ணிக்கை

1. திருவொற்றியூா் 608

2. மணலி 280

3. மாதவரம் 438

4. தண்டையாா்பேட்டை 1006

5. ராயபுரம் 1,214

6. திரு.வி.க.நகா்  998

7. அம்பத்தூா் 943

8. அண்ணா நகா் 1,560

9. தேனாம்பேட்டை 1,497

10. கோடம்பாக்கம் 2,199

11. வளசரவாக்கம் 914

12. ஆலந்தூா் 508

13. அடையாறு 1,164

14. பெருங்குடி 353

15.சோழிங்கநல்லூா் 464
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

முகூா்த்தம், வார விடுமுறை: 1,875 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

தில்லியில் தோ்தல் உத்தரவாத போட்டியில் பெரிய கட்சிகள்!

சக்திவாய்ந்த சூரியப் புயலை பதிவு செய்த ஆதித்யா: இஸ்ரோ

SCROLL FOR NEXT