முகப்பு
தமிழ்நாடு

மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்

மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்
பகிர்:


மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன்  உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (21.7.2020) காலமானார் என்ற செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன்.

மூத்த அரசியல்வாதியான லால்ஜி டாண்டன், உத்தர பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிகார் மாநில ஆளுநராகவும் திறம்பட பணியாற்றிய பெருமைக்குரியவர்.

பொது வாழ்விலும், மக்கள் சேவையிலும் இவருடைய பணி மகத்தானது. லால்ஜி டாண்டன் அவர்களின் மறைவு, உத்தர பிரதேச மாநில மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →