தமிழ்நாடு

பிளஸ்-2 மாணவர்களுக்கு மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு அறிவிப்பு வெளியீடு

DIN

சென்னை: பிளஸ்-2 மாணவர்களுக்கு மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான நடைமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பிளஸ்-2 மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு வரும் ஜூலை 24 முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும்.

தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 செலுத்த வேண்டும்

விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும்

மறுமதிப்பீடு/மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஒரு மணி நேரத்திற்கு 20 பேர் மட்டுமே பள்ளிக்கு வரவழைக்கப்பட வேண்டும்.

பள்ளி வளாகத்திற்குள் அதிகமான மாணவர்கள் ஒன்று கூடுதலை தவிர்க்க வேண்டும்'

மாணவர்கள் முகக்கவசமும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் ஆசிரியர்கள்  கையுறையும் அணிந்திருக்க வேண்டும்

தனி மனித இடைவெளி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கை கழுவ வசதி உள்ளிட்ட விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

SCROLL FOR NEXT