தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி சோதனை தொடக்கம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி சோதனை தொடக்கம்

தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் முயற்சி இன்று தொடங்கியது.

DIN


சென்னை: தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் முயற்சி இன்று தொடங்கியது.

கரோனா வைரஸை தடுக்க கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கோவாக்சின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க தமிழகத்தில் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதன்படி, தமிழகத்தில் இன்று கோவாக்சின் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் சோதனை தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் மருந்து தன்னார்வலர்கள் இருவருக்கு செலுத்தி சோதிக்கப்பட்டது.

இதற்காக தேர்வு செய்யப்பட்ட 10 பேரில் இரண்டு பேருக்கு 0.5 என்ற அளவில் இந்த மருந்து தடுப்பூசி மூலம் செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து எஸ்ஆர்எம் பல்கலைக்கழக துணைவேந்தர் ரவிக்குமார் கூறுகையில், கோவாக்சின் மருந்து பரிசோதனையானது 6 மாதங்கள் வரை நடக்கும். அதே சமயம், கோவாக்சின் மருந்தின் செயல்பாடு வரும் 3 மாதங்களில் சரியாக தெரியவரும். பரிசோதனையில் நல்ல முடிவு கிடைக்கும்பட்சத்தில், மருந்தை விரைவல் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசியான கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

SCROLL FOR NEXT